11

புதிய தலைமுறை அறக்கட்டளை, SRM பல்கலைகழகத்தில்புதிய தலைமுறைவிழுதுகள்இலவச உயர் கல்வித் திட்டத்தின் மூலம் படிக்கும் மாணவர்கள் ஆகியோர் 06.08.2017 அன்று சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள Good Life நல்வாழ்வு மையத்திற்கு சென்றனர்.

இம்மையத்தில், ஆதரவற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய 90 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.

புதிய தலைமுறை அறக்கட்டளை வாயிலாக SRM மாணவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு கேக்குகளும், பிஸ்கட்டுகளும் வழங்கினர்.

மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவ அனுபவங்களையும் கருத்துகளையும் அங்குள்ள குழந்தைகளோடு பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவர்களோடு சிறிது நேரம் கலந்து உரையாடி மகிழ்ந்தனர்.