நம்மால் முடியும்! நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும்! மக்களே ஒன்றிணைந்து செயலாற்றினால் நீர், நிலம், சாலை, கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். மக்களே களமிறங்கி செயலாற்றினால் உலகின் பல திசைகளிலிருந்தும் உதவிக்கரங்கள் வரும். அரசும், அதிகாரிகளும் தாமாகவே உதவுவதற்கு முன்வருவார்கள். இந்த நேர்மறை எண்ணங்களை மக்களின் மனதில் விதைப்பது மட்டுமில்லாமல், மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி, இளைஞர்களையும், ஆர்வலர்களையும் ஈடுபடுத்தி, அரசையும் இணைத்து மக்களின் குறைகளை தீர்ப்பதுதான்  நம்மால் முடியும் நிகழ்ச்சி!

விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் பாழடைந்து கிடைக்கும் நீர் நிலைகளையும், குளங்களையும் தூர்வாருகின்ற பணியில் தற்போது நம்மால் முடியும் நிகழ்ச்சிக் குழு ஈடுபட்டு வருகின்றார்கள்